Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நெருங்கும் பொங்கல்... பானைகள் 'பராக்'

நெருங்கும் பொங்கல்... பானைகள் 'பராக்'

நெருங்கும் பொங்கல்... பானைகள் 'பராக்'

நெருங்கும் பொங்கல்... பானைகள் 'பராக்'

ADDED : ஜன 06, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். சூரியனை பொங்கல் வைத்து வழிபடும் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகையுடன், இன்னும் சில நாட்களில், தை மகள் பிறக்கப் போகிறாள்.

பொங்கல் என்றாலே, பானை தான் நினைவுக்கு வரும். பொங்கல் வைக்க, சிலர், ஆண்டுதோறும் புது பானை வாங்குவர். சிலர் பொங்கல் வைப்பதற்கென்றே, பானை வாங்கி அதை ஒவ்வொரு ஆண்டும் அழகாக அலங்கரித்து அதில் பொங்கல் வைப்பர். பொங்கலுக்கு மண்பானை, வெண்கலம் அல்லது பித்தளை பானையை பயன்படுத்துவதும் வழக்கம்.

பானையில் வைக்கப்படும் பொங்கல், பொங்கி வழிவது போன்று, நம் வாழ்விலும் நலமும், வளமும் பொங்கி வழிய வேண்டும் என்பதே, இப்பண்டிகையின் சாராம்சம். இந்நிலையில், பொங்கல் பானை விற்பனை, துவங்கிவிட்டது.

குறிப்பாக, பொங்கல் பானை தயாரிப்பாளர்கள் நிறைந்த அனுப்பர்பாளையம் பகுதியில் பொங்கல் பானை விற்பனையை பார்க்க முடிகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us