/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அளவையாளர் நியமனம் அவசியம்; கூட்டுறவு ஊழியர்கள் எதிர்பார்ப்பு அளவையாளர் நியமனம் அவசியம்; கூட்டுறவு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
அளவையாளர் நியமனம் அவசியம்; கூட்டுறவு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
அளவையாளர் நியமனம் அவசியம்; கூட்டுறவு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
அளவையாளர் நியமனம் அவசியம்; கூட்டுறவு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 13, 2025 11:31 PM
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) நிர்வாக குழு கூட்டம், மாவட்ட தலைவர் கவுதமன் தலைமையில் நடந்தது.
மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் (வளர்மதி) பணிபுரியும் ஊழியர்களுக்கு, மாத சம்பள தொகையை 10ம் தேதி வழங்குவதை தவிர்க்க வேண்டும், மாதந்தோறும், 1ம் தேதி சம்பளம் வழங்க வேண்டும்.
ரேஷன் கடைகளில், பாய்ன்ட் ஆப் சேல் கருவியுடன், ப்ளூடூத் மூலம் எடை தராசு இணைக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர் மட்டுமே உள்ள கடைகளில், ஒருவரே பில் போட்டு, பொருட்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அளவையாளர் நியமிக்க வேண்டும்.
ரேஷன் கடைகளுக்கு தரமான, சரியான எடையில் உணவுப்பொருட்கள் அனுப்பப்படுவதை, கூட்டுறவு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்குப்பைகளை உடனடியாக அகற்றவேண்டும். முழு மற்றும் பகுதி நேர கடைகளுக்கு ஒரே பாய்ன்ட் ஆப் சேல் கருவி பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, தனித்தனியாக கருவிகள் வழங்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டுறவு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ், துணை தலைவர்கள் கருப்புசாமி, கார்த்திகேயன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.