/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பொதுத்தேர்வில் அசத்திய அனுப்பர்பாளையம் அரசு பள்ளி பொதுத்தேர்வில் அசத்திய அனுப்பர்பாளையம் அரசு பள்ளி
பொதுத்தேர்வில் அசத்திய அனுப்பர்பாளையம் அரசு பள்ளி
பொதுத்தேர்வில் அசத்திய அனுப்பர்பாளையம் அரசு பள்ளி
பொதுத்தேர்வில் அசத்திய அனுப்பர்பாளையம் அரசு பள்ளி
ADDED : மே 22, 2025 03:45 AM

திருப்பூர்; திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பொது தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று சாதனை படைத்துள்ளது.
சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவில், அனுப்பர்பாளையம் அரசு பள்ளி, 92.1 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவி மலர்க்கொடி, 552 மதிப்பெண்; ரித்திக், 545 மதிப்பெண்; நித்யா, 540 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்றிடம் பெற்றனர்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், 82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி பிரியதர்ஷினி, 479 மதிப்பெண் பெற்று முதலிடம்; வர்ஷினி, 471 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பெற்றனர். மாணவர் ஸ்ரீஹரி மற்றும் பிரவின் குமார் ஆகியோர், 470 மதிப்பெண் பெற்று, 3ம் இடத்தை பகிர்ந்துக் கொண்டனர். மேலும், 400 மதிப்பெண்களுக்கு மேல், 40 பேர் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, தமிழ் பாடத்தில், 97 மதிப்பெண்; ஆங்கிலம் 99; கணிதம், 94; அறிவியல், 96; சமூக அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண் பெற்றனர்.
இப்பள்ளியில், ஏராளமான மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.