/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மேல்நிலை தொட்டி அருகே சமூக விரோதிகள் நடமாட்டம் மேல்நிலை தொட்டி அருகே சமூக விரோதிகள் நடமாட்டம்
மேல்நிலை தொட்டி அருகே சமூக விரோதிகள் நடமாட்டம்
மேல்நிலை தொட்டி அருகே சமூக விரோதிகள் நடமாட்டம்
மேல்நிலை தொட்டி அருகே சமூக விரோதிகள் நடமாட்டம்
ADDED : மே 20, 2025 11:23 PM

திருப்பூர், ; திருப்பூர் மாநகராட்சி 6வது வார்டு, கவுண்டநாயக்கன்பாளையத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக தகவல் பரவியதால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மண்டல தலைவர் கோவிந்தராஜ், மலம் கலக்கப்பட்டதாக கூறப்படும் தொட்டியிலிருந்து தண்ணீர் பிடித்து, மக்கள் முன்னிலையில் குடித்தார்.
இதுதொடர்பாக, மா.கம்யூ., திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் அக்கட்சியினர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனு:
கவுண்டநாயக்கன்பாளையம் மேல் நிலை குடிநீர் தொட்டி தொடர்பாக, மா.கம்யூ., சார்பில் குழு அமைத்து கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை கவனத்துக்கு கொண்டுவந்துள்ளோம். 17.5 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை தொட்டியிலிருந்து, 18வது வார்டு மற்றும் 33 வது வார்டுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேல் நிலை தொட்டியின் மீது, பால் பாக்கெட்டுகள், மது பாட்டில்கள்கிடந்துள்ளன.
தொட்டியில் மலம் கலந்ததாகவும் மக்கள் மத்தியில் தகவல் பரவியுள்ளது. குற்ற செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேல்நிலை தொட்டிக்கு மேற்கே உள்ள எரியூட்டும் மயானத்துக்கு, மேற்கூரை அமைக்கவேண்டும். சுற்றுச்சுவர் அமைத்து, சமூக விரோதிகள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும். மேல்நிலை தொட்டி அருகே சமூக விரோதிகள், போதை ஆசாமிகள் தஞ்சம் அடைகின்றனர். போலீசார் தினமும் அப்பகுதியில் இரவு ரோந்து செல்லவேண்டும்.
சி.சி.டி.வி., கேமரா பொருத்தி, போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கண்காணிக்கவேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வினியோகிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.