/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டுபல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
UPDATED : ஜூன் 12, 2024 05:48 PM
ADDED : ஜூன் 12, 2024 05:30 PM

பல்லடம்: பல்லடம் - திருச்சி ரோட்டில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மின் இணைப்புக்காக உதவி செயற்பொறியாளர் சுரேஷ்பாபு, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை தொடர்ந்து, கையும் களவுமாக பிடித்தவர்கள் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்