/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
ADDED : மார் 28, 2025 03:20 AM
திருப்பூர்: திருப்பூர், பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலைகளான சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டி கள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியில், 8ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக, மலபார் ஜூவல்லரி உரிமையாளர் அருள்பிரகாஷ், வேல் டெக்ஸ் உரிமையாளர் தங்கவேல் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினர். பள்ளி தலைமையாசிரியை மலர்விழி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


