Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருப்பூரில் 'ஆனந்தம் சில்க்ஸ்' திறப்பு

திருப்பூரில் 'ஆனந்தம் சில்க்ஸ்' திறப்பு

திருப்பூரில் 'ஆனந்தம் சில்க்ஸ்' திறப்பு

திருப்பூரில் 'ஆனந்தம் சில்க்ஸ்' திறப்பு

ADDED : செப் 14, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூர், வாலிபாளையம் யுனிவர்சல் தியேட்டர் வளாகம் முழுமையாக புனரமைக்கப்பட்டு, 'ஆனந்தம் சில்க்ஸ்' நிறுவனத்தின் புதிய ேஷாரூம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதன் நிறுவனர் சங்கரமூர்த்தி மூப்பனாரின் மனைவி சுந்தர ஆனந்தம் புதிய ேஷாரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிர்வாகிகள் சண்முகநாதன், செல்வக்குமார், வடிவேலன், கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், கிளாசிக் போலோ செயல் இயக்குனர் சிவராம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கடை நிர்வாகிகள் கூறியதாவது: எங்கள் நிறுவனம் முதலில் ராமநாதபுரத்தில் துவங்கப்பட்டது.

தரம், நியாயமான விலை, சிறந்த வாடிக்கையாளர் சேவை காரணமாக இதன் கிளைகள், கும்பகோணம், தஞ்சை, ராஜபாளையம், புதுக்கோட்டை, கடலுார் ஆகிய பகுதிகளில் துவங்கப்பட்டது. தற்போது திருப்பூரில் துவங்கப்பட்டுள்ளது.

இங்கு பெண்களுக்கான பேன்சி சேலை, எம்ப்ராய்டரி சேலை, பிராண்டட் சேலை, டிசைன் சேலை ரகங்கள் உள்ளன. மேலும் காஞ்சிபுரம், ஆரணி, பனாரஸ், திருபுவனம், தர்மாவரம் பாரம்பரிய பட்டுச் சேலைகளும் உள்ளன.

முதல் தளத்தில் பெண்கள் ரெடிமேட் பிரிவு உள்ளது. இதில், சுடிதார், டாப்ஸ், லெகின்ஸ், ஜீன்ஸ் ரகங்கள் உள்ளன. இளம் பெண்கள், குழந்தைகளுக்கான கண்கவரும் வகையிலான ஆடை ரகங்கள் உள்ளன.

இரண்டாவது தளத்தில் ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகளும், மூன்றாவது தளத்தில் பிராண்டட் சர்ட், பேன்ட், டி-சர்ட் ஷர்வாணி, கோட் சூட் உள்ளிட்டவை உள்ளன.

குடும்பத்தினர் அனைவருக்கும் மன நிறைவான ஆடைகளை தேர்வு செய்து வாங்கலாம். முழுமையான ஷாப்பிங் திருப்தியை உறுதியாகப் பெறலாம். திறப்பு விழாவை முன்னிட்டு, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us