/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மன ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு துவக்கம்மன ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு துவக்கம்
மன ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு துவக்கம்
மன ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு துவக்கம்
மன ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு துவக்கம்
ADDED : ஜன 12, 2024 11:11 PM
உடுமலை:போடிபட்டியில், பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தின் சார்பில், கிராமப்புற மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு துவக்க நிகழ்ச்சி நடந்தது.
ராஜயோக தியான மூத்த ஆசிரியர் அனுசுயா தலைமை வகித்தார். உடுமலை பி.டி.ஓ., சுப்பிரமணியம், போக்குவரத்து எஸ்.ஐ., கண்ணன், போடிபட்டி ஊராட்சித்தலைவர் சவுந்தர்ராஜன், டாக்டர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.
''இயற்கை மற்றும் இறைவனால், கொடுக்கப்பட்ட இந்த உடலின் மதிப்பை உணர்ந்து பாதுகாக்க வேண்டும். இறைவனிடம் மனதால் தொடர்பு கொண்டு, தன் மனோபலத்தினை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
எங்கு மனோபலம் இருக்குமோ, அங்கு தீய பழக்க வழக்கங்களிடம் இருந்து, விடுதலை பெற முடியும். தியானத்தின் வாயிலாக, மனோபலத்தை அதிகரித்துக்கொண்டால், அனைத்து மன விருப்பங்களையும் பூர்த்தி செய்து கொள்வோம்.
ஒவ்வொருவரும், தன் மனதில் நற்பண்புகளை வளரச்செய்து, அவரவர் வீட்டை நற்பண்புகளின் நறுமணம் வீசும், ஆலமரமாக மாற்றலாம்,'' என ராஜயோக தியான மூத்த ஆசிரியர் அனுசுயா பேசினார்.
நிகழ்ச்சியில், பல்வேறு கிராம மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.