/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அகில இந்திய ஹாக்கி: சிக்கண்ணா மாணவர் தேர்வுஅகில இந்திய ஹாக்கி: சிக்கண்ணா மாணவர் தேர்வு
அகில இந்திய ஹாக்கி: சிக்கண்ணா மாணவர் தேர்வு
அகில இந்திய ஹாக்கி: சிக்கண்ணா மாணவர் தேர்வு
அகில இந்திய ஹாக்கி: சிக்கண்ணா மாணவர் தேர்வு
ADDED : ஜன 27, 2024 11:44 PM
திருப்பூர்:அகில இந்திய தங்க கோப்பை ஹாக்கிப் போட்டி வரும், ஜன.31 முதல், பிப்., 6 வரை, உ.பி., மாநிலம், ஜான்சியில் நடக்கிறது.
கடந்த, 16ம் தேதி ஒலிம் பிக் போட்டியில் விளையாடிய ஹாக்கி வீரர் பாஸ்கரன், ஹாக்கி அகாடமி சார்பில், 21 வயதுக்குட்பட்ட பிரிவில், தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், சிறப்பாக விளையாடிவர்கள், தங்க கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி முதலாமாண்டு முதுகலை வணிகவியல் படிக்கும் மாணவன் சுரேந்தர், இரண்டாமாண்டு மாணவர் சூர்யா மற்றும், இளங்கலை வணிகவியல் மாணவன் சிங்கபிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், உடற்கல்வி இயக்குனர் ராஜாராம் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.