/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விஷவாயு தாக்கி பலியாகும் பரிதாபம் கண்காணிப்பு குழு அமைக்கணும்! கலெக்டரிடம் ஏ.ஐ.டி.யு.சி., மனு விஷவாயு தாக்கி பலியாகும் பரிதாபம் கண்காணிப்பு குழு அமைக்கணும்! கலெக்டரிடம் ஏ.ஐ.டி.யு.சி., மனு
விஷவாயு தாக்கி பலியாகும் பரிதாபம் கண்காணிப்பு குழு அமைக்கணும்! கலெக்டரிடம் ஏ.ஐ.டி.யு.சி., மனு
விஷவாயு தாக்கி பலியாகும் பரிதாபம் கண்காணிப்பு குழு அமைக்கணும்! கலெக்டரிடம் ஏ.ஐ.டி.யு.சி., மனு
விஷவாயு தாக்கி பலியாகும் பரிதாபம் கண்காணிப்பு குழு அமைக்கணும்! கலெக்டரிடம் ஏ.ஐ.டி.யு.சி., மனு
ADDED : மே 20, 2025 11:29 PM
திருப்பூர், ;சாயக்கழிவுநீர் தொட்டி, 'செப்டிக் டேங்க்' சுத்தம் செய்யும் பணி, உரிய பாதுகாப்புடன் நடப்பதை உறுதி செய்ய, கண்காணிப்பு குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
திருப்பூர் அருகேயுள்ள கரைப்புதுாரில் இயங்கும் சாய ஆலை செப்டிக் டேங்க் தொட்டியை சுத்தம் செய்த பணியாளர்கள் மூன்று பேர் விஷ வாயு தாக்கி இறந்தனர். துாய்மை பணியில் ஈடுபட்ட போது, ஆலையில் உள்ள யாரும் துணைக்கு வரவில்லை.
அடிக்கடி திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆலைகளில் இதேபோன்ற சம்பவம் நடந்து வருகிறது. பலியான குடும்பங்களுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர் குடும்பங்களுக்கு வீடு அல்லது வீட்டுமனை வழங்க வேண்டும்.
இறந்தவர் குடும்பங்களுக்கு சட்டப்படியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசுக்கட்டுப்பாடு வாரியம், சரியாக கண்காணிக்காமல் இருந்துள்ளது; விபத்து நடந்த பிறகு, அங்கு சென்று ஆராயாமல், முறையாக கண்காணித்து, விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டியபொறுப்பும் உள்ளது.
சாயக்கழிவுநீர் தொட்டி, 'செப்டிக் டேங்க்' சுத்தம் செய்யும் பணி, உரிய பாதுகாப்புடன் நடப்பதை உறுதி செய்ய, கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். தொட்டி சுத்தம் செய்யும் பணிகளை துவக்குவதற்கு முன்னதாக, கண்காணிப்பு குழுவுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். விதிமுறைகளை சரிவர பின்பற்றாதவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.