/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அ.தி.மு.க., பொதுச் செயலாளர் திருப்பூரில் இன்று பிரசாரம் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் திருப்பூரில் இன்று பிரசாரம்
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் திருப்பூரில் இன்று பிரசாரம்
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் திருப்பூரில் இன்று பிரசாரம்
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் திருப்பூரில் இன்று பிரசாரம்
ADDED : செப் 11, 2025 10:31 PM
திருப்பூர்; 'மக்களை காப்போம்... தமிழகத்தை மீட்போம்' என்கிற கோஷத்துடன், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வரும், அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி இன்று திருப்பூரில் பிரசாரம் செய்கிறார்.
இன்று காலை, 10:00 மணிக்கு, 15 வேலம்பாளையம் ரோட்டிலுள்ள பார்ச்சூன் ஓட்டலில், அனைத்து தொழில் அமைப்பினருடன், பழனிசாமி கலந்துரையாடுகிறார். பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜாப்ஒர்க் சார்ந்த அனைத்து சங்கங்கள், பாத்திரம், கைத்தறி, விசைத்தறி சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில் சார்ந்த பிரச்னைகள்; கோரிக்கைகள் தொடர்பாக, அவரிடம் தெரிவிக்கின்றனர்.
அடுத்து, இன்று மாலை மாலை, 4:00 மணிக்கு, திருப்பூர் வடக்கு தொகுதியில், பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் பஸ்ஸ்டாப் பகுதியிலும், அடுத்ததாக தெற்கு தொகுதியில் மாநகராட்சி அலுவலகம் அருகிலும், பழனிசாமி, மக்கள் மத்தியில் பேசுகிறார்.
கூட்ட ஏற்பாடுகளை , மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அக்கட்சியினர் செய்துள்ளனர்.