ADDED : பிப் 24, 2024 11:50 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பணியாற்றி வந்தவர், மாரியப்பன். இவர், விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறையில், விதை ஆய்வு இணை இயக்குனராக, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், வரும், ஏப்., 24ல் பணி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனராக முத்துலட்சுமி பொறுப்பேற்க உள்ளார். கோவை வேளாண்மை இணை இயக்குனராக பணிபுரிந்து வந்த அவர், கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்தார். இவர், வரும், மே., 31ல் பணி ஓய்வு பெறவுள்ளார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேரடி உதவியாளர் (வேளாண்மை) பணிபுரிந்து வந்த கிருஷ்ணவேணி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக கோவை, தொண்டாமுத்துார் வேளாண் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த ஷீலா பூசலட்சுமி, திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (வேளாண்மை) பொறுப்பேற்க உள்ளார்.