ADDED : செப் 22, 2025 10:58 PM
உடுமலை; பெதப்பம்பட்டி நால்ரோட்டில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அப்பகுதியில் தாராபுரம் ரோட்டில், வாகனங்கள் செல்லும் பகுதி வரை, கடைக்காரர்கள் பல்வேறு பொருட்களை வைத்து கொள்கின்றனர்.
உடுமலை ரோட்டில், உயர் மின் கோபுர விளக்கையொட்டி, குறுகலான இடத்தில், பழக்கூடைகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து ஆக்கிரமிக்கின்றனர். இதனால், நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டும், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.