/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அடையாளம் இல்லாத வேகத்தடையால் விபத்து அடையாளம் இல்லாத வேகத்தடையால் விபத்து
அடையாளம் இல்லாத வேகத்தடையால் விபத்து
அடையாளம் இல்லாத வேகத்தடையால் விபத்து
அடையாளம் இல்லாத வேகத்தடையால் விபத்து
ADDED : மே 15, 2025 11:33 PM
உடுமலை,; உடுமலை, ராமசாமி நகர் அரசு கலைக்கல்லுாரி ரோட்டில் வேகத்தடை அமைத்திருப்பது, அடையாளம் தெரியாமல் இருப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது.
உடுமலை, ராமசாமி நகரில் இருந்து அரசு கலைக்கல்லுாரி செல்லும் ரோட்டில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அவ்வழியை அதிகம் பயன்படுத்துகின்றனர். தளி ரோட்டுக்கு மாற்று பாதையாகவும் இந்த ரோடு உள்ளது.
இந்த ரோட்டின் வளைவான பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகத்தடை அடையாளம் இல்லாமல் இருப்பதால், வேகமாக வருவோர் வளைவில் திரும்பும்போது வேகத்தடையை கவனிக்காமல் விபத்துக்குள்ளாகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் அப்பகுதியில் வெளிச்சம் இல்லாததால் அதிகமான விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளை தவிர்க்க வேகத்தடையில் வர்ணம் பூசியும், ரோட்டோரத்தில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வைத்தும் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், அப்பகுதியில் தெருவிளக்கை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.