ADDED : மே 14, 2025 11:33 PM
உடுமலை; பஞ்சலிங்க அருவிக்கு அதிக நீர்வரத்து எதிர்பார்க்கப்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணியர் நேற்று அனுமதிக்கப்படவில்லை.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் நேற்று பகலில் மழை பெய்தது. இதையடுத்து திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு திடீர் நீர்வரத்து எதிர்பார்க்கப்பட்டது. இதனால், அருவிக்குச்செல்ல சுற்றுலா பயணியருக்கு நேற்று மாலை தடை விதிக்கப்பட்டது.
கடந்த 12ம் தேதி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணியர் வெளியேற்றப்பட்டனர். மறுநாள் அருவியில் நீர் வரத்து சீரானது; சுற்றுலா பயணியரும் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் தடைவிதிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்தனர்.


