ADDED : ஜன 25, 2024 06:14 AM
திருப்பூர் : இன்று, ஜனவரி 25ம் தேதி,தேசிய வாக்காளர் தினம். இதை முன்னிட்டு, தேசிய உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராஜ் தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு தனி தாசில்தார் தங்கவேல் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள், வாக்காளர் தின உறுதிமொழியேற்றனர்.
'ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள இந்திய. குடிமக்களான நாங்கள், எங்கள் நாட்டின் ஜனநாயக சம்பிரதாயங்கள், அமைதியான நியாயமான தேர்தல் நடைமுறையின் மதிப்பை உயர்த்துவோம்' என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
n இன்று காலை, 11:00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நடமாடும் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, தேசிய வாக்காளர் தின இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழங்கப்படுகிறது.