/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆதார் சிறப்பு முகாம்; 24 பேருக்கு திருத்தம் ஆதார் சிறப்பு முகாம்; 24 பேருக்கு திருத்தம்
ஆதார் சிறப்பு முகாம்; 24 பேருக்கு திருத்தம்
ஆதார் சிறப்பு முகாம்; 24 பேருக்கு திருத்தம்
ஆதார் சிறப்பு முகாம்; 24 பேருக்கு திருத்தம்
ADDED : மார் 17, 2025 01:38 AM
திருப்பூர்; அவிநாசி தாலுகா அலுவலக மையத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில், 24 பேர், ஆதாரில் திருத்தத்துக்காக பதிவு செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில், அரசு கேபிள் 'டிவி' நிறுவன கட்டுப்பாட்டில், ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் இயங்குகின்றன. இம்மையங்களில் சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்று, அவிநாசி தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கும் மையத்தில், ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்களிடமிருந்து உரிய ஆவணங்கள் பெறப்பட்டு, புதிய ஆதார் பதிவு, ஆதாரில் முகவரி, மொபைல் எண் மாற்றம், கைரேகை, கண் கருவிழி ஆகிய பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்பட திருத்தங்களுக்காக பதிவு செய்யப்பட்டது. சிறப்பு முகாமில், அவிநாசி சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 24 பேருக்கு ஆதாரில் பல்வேறு திருத்தத்துக்காக பதிவு செய்யப்பட்டது.
வரும் 23ம் தேதி, ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் இயங்கும் ஆதார் மையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பணிக்குச் செல்வோர், வார வேலை நாட்களில், ஆதார் பதிவு மற்றும் திருத்தத்துக்காக விடுப்பு எடுக்கவேண்டியுள்ளது.
வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் வசதிக்காகவே, வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, சுழற்சி முறையில் ஒவ்வொரு தாலுகா அலுவலக ஆதார் மையத்திலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், வாரவிடுமுறை நாளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி ஆதாரில் தேவையான திருத்தங்கள் செய்து கொள்ள வேண்டும் என, ஆதார் பிரிவினர் அறிவுறுத்துகின்றனர்.