/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உலக நலன் காக்க திருமுறை விண்ணப்பம் உலக நலன் காக்க திருமுறை விண்ணப்பம்
உலக நலன் காக்க திருமுறை விண்ணப்பம்
உலக நலன் காக்க திருமுறை விண்ணப்பம்
உலக நலன் காக்க திருமுறை விண்ணப்பம்
ADDED : செப் 22, 2025 12:45 AM

அவிநாசி; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று உலக நலன் கருதி திருமுறை விண்ணப்பம் நடந்தது.
உலக அமைதி தினமான நேற்று, வட அமெரிக்கா பன்னிரு திருமுறை கழகம், அமெரிக்கா சைவ சித்தாந்த சபை, ஓதுவா மூர்த்திகள் நலச்சங்கம் ஆகியன இணைந்து, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள கருணாம்பிகை கலையரங்கில், உலக நலன் கருதி திருமுறை விண்ணப்பம் நடந்தது.
முன்னுாறுக்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகள் மற்றும் பக்க இசைக் கலைஞர்கள் பங்கேற்று மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களையும், திருமுறை ஞான பாடல்களை ஐந்து அமர்வுகளாக சேர்ந்திசையாக தொடர்ந்தும் காலை 7:00 மணிக்கு துவங்கி இரவு 7:00 மணி வரை 12 மணி நேரம் மெய்யுருகப் பாடி வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஓதுவாமூர்த்திகள் நலச்சங்க தலைவர் கரூர் குமார சாமிநாத தேசிகர் செய்திருந்தார்.