Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குடும்பத்தை சிதைக்கும் விபத்து; நீதிபதி வேதனை

குடும்பத்தை சிதைக்கும் விபத்து; நீதிபதி வேதனை

குடும்பத்தை சிதைக்கும் விபத்து; நீதிபதி வேதனை

குடும்பத்தை சிதைக்கும் விபத்து; நீதிபதி வேதனை

ADDED : ஜன 06, 2024 11:52 PM


Google News
'சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தால், அவரது குடும்பம் நிர்க்கதியாகி விடுகிறது. எனவே, கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும்' என, சாலை பாதுகாப்பு விழாவில் நீதிபதி பேசினார்.

திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 மாணவர்கள், திருப்பூர் தெற்கு போலீசார் இணைந்து, சாலை பாதுகாப்பு வார விழாவில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி தலைமை வகித்து, பேசியதாவது:

தினந்தோறும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது போக்குவரத்து விதிமீறல்கள் தான். முறையாக சாலை விதிகளை பின்பற்றும் போது விபத்துகள் நேரிடாது.

அதிக வேகம் போன்ற காரணங்களால் ஏற்படும் விபத்தில் ஒருவர் இறந்து விட்டால், அவரை சார்ந்துள்ள குடும்பம் நிர்க்கதியாகி விடுகிறது. அனைவரும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us