மனைவியை தாக்கிய காவலர் மீது வழக்கு
மனைவியை தாக்கிய காவலர் மீது வழக்கு
மனைவியை தாக்கிய காவலர் மீது வழக்கு
ADDED : பிப் 10, 2024 08:27 PM
திருப்பூர்:மதுரை மாவட்டம், மேலுார், மேலவளவை பகுதியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன், 30; இரண்டாம் நிலை காவலர். இவரது மனைவி ஜெகஜோதி, 25. கடந்த, 2018ல் திருமணம் நடந்து, காங்கேயம் உடையார் காலனியில் வசிக்கின்றனர். பாண்டீஸ்வரன் காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருகிறார்.
ஆறு மாதங்களாக தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை இருந்தது. கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவி ஜெகஜோதி விசாரித்தார். அதில், உறவுகார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது தெரிந்தது.
கேள்வி எழுப்பிய ஜெகஜோதியை பாண்டீஸ்வரன் தாக்கினார். ஜெகஜோதி புகாரின்படி, காங்கேயம் மகளிர் போலீசார் பாண்டீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.