/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இலக்கு இல்லாமல் கால்வாய் பணி இரவில் தவறி விழுந்தால் அபாயம்இலக்கு இல்லாமல் கால்வாய் பணி இரவில் தவறி விழுந்தால் அபாயம்
இலக்கு இல்லாமல் கால்வாய் பணி இரவில் தவறி விழுந்தால் அபாயம்
இலக்கு இல்லாமல் கால்வாய் பணி இரவில் தவறி விழுந்தால் அபாயம்
இலக்கு இல்லாமல் கால்வாய் பணி இரவில் தவறி விழுந்தால் அபாயம்
ADDED : பிப் 24, 2024 12:10 AM

பல்லடம்;காலம் கடந்து நடந்து வரும் கால்வாய் பணி காரணமாக, மக்கள் கவலையடைந்து வருகின்றனர்.
பல்லடம் நகராட்சி, 4வது வார்டுக்கு உட்பட்ட செந்தோட்டம் செல்லும் வழியில், கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி - கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் கால்வாய் கட்டுமான பணி நடந்து வருகிறது.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
தெருவின் ஒரு பாதியில் இருந்து கால்வாய் கட்டுமான பணி நடந்து வருகிறது. கழிவு நீர் செல்லக்கூடிய 'டிஸ்போஸல் பாயின்ட்' எங்குள்ளது என்றே தெரியாமல் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கால்வாய் கட்டுமான பணி காரணமாக, இப்பகுதியில் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.
கால்வாய் கட்டுமான பணி மந்தகதியில் நடந்து வருவதால், இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து மெயின் ரோட்டுக்கு செல்வதில் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில், சிறுவர்கள் கால்வாய்க்குள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. கால்வாய் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கழிவு நீரை கொண்டு செல்ல 'டிஸ்போஸல் பாயின்ட்' எங்கு உள்ளது என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்.