Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காங்கயம் தாலுகாவில் 8,148 பட்டா வழங்கல்

காங்கயம் தாலுகாவில் 8,148 பட்டா வழங்கல்

காங்கயம் தாலுகாவில் 8,148 பட்டா வழங்கல்

காங்கயம் தாலுகாவில் 8,148 பட்டா வழங்கல்

ADDED : செப் 19, 2025 10:06 PM


Google News
காங்கயம்; மாநிலம் முழுக்க, தகுதியுள்ளவர்களுக்கு இயன்றளவு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பட்டா வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு இடம் தேர்வு செய்து, பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் காங்கயம், வீரணாம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பட்டா வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

கடந்த நான்காண்டுகளில், காங்கயம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 994 நத்தம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், 739 புதிய பட்டாக்கள்; ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 4,029 இணைய வழி பட்டாக்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 894 இணைய வழிபட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, வழங்கப்பட்ட, 1,492 பட்டாக்கள், கிராம கணக்கில் மாறுதல் செய்து என, மொத்தம், 8,148 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us