ADDED : செப் 22, 2025 12:30 AM
திருப்பூர்;வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்துக்கு நேற்று 5 டன் முருங்கை விற்பனைக்காக வந்தது.
வெள்ளகோவில், முத்துார், காங்கயம், புதுப்பை உள்ளிட்ட பகுதியில் இருந்து சாகுபடி செய்யப்படும் முருங்கைகள் வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையம் மூலம் சென்னை, கோவை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த வாரம், 10 டன் வந்தது. கிலோ, 65 ரூபாய்க்கு விற்றது. நேற்று, ஐந்து டன் வந்தது. செடி முருங்கை, 50 ரூபாய்க்கும், மர முருங்கை, 60 ரூபாய்க்கும், கரும்பு முருங்கை, 70 ரூபாய்க்கும் விற்பனையானது.