/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சிவன்மலையில் ஒரே மாதத்தில் திரண்ட 4.40 லட்சம் பக்தர்கள்சிவன்மலையில் ஒரே மாதத்தில் திரண்ட 4.40 லட்சம் பக்தர்கள்
சிவன்மலையில் ஒரே மாதத்தில் திரண்ட 4.40 லட்சம் பக்தர்கள்
சிவன்மலையில் ஒரே மாதத்தில் திரண்ட 4.40 லட்சம் பக்தர்கள்
சிவன்மலையில் ஒரே மாதத்தில் திரண்ட 4.40 லட்சம் பக்தர்கள்
ADDED : பிப் 25, 2024 12:55 AM

திருப்பூர்;சிவன்மலை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, கடந்த மாதம் மட்டும், 4.40 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகேயுள்ள சிவன்மலையில், பிரசித்தி பெற்ற ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருத்தலத்தின் மகிமையை அருணகிரிநாதர், திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார். சிவன்மலை மீதுள்ள கோவிலுக்கு நடைபயணமாக செல்ல, 496 படிகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வாயிலாக கோவிலுக்கு செல்ல தனிப்பாதை உள்ளது.இக்கோவிலில் வைக்கப்பட்டுள்ள 'ஆண்டவன் உத்தரவுப்பெட்டி'யில், பக்தர்களின் கனவில் இறைவன் தோன்றி கூறும் பொருள் வைக்கப்பட்டு, பூஜிக்கப்படுகிறது.
இக்கோவிலுக்கு கடந்த, ஜன., மாதம் மட்டும், 4.40 லட்சம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.
அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'கடந்த மாதம் நடந்த, தைப்பூச வழிபாட்டில் பங்கேற்க லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டதால், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
ஆன்மிக சுற்றுலா வரும் பலரும், இக்கோவிலுக்கு வருகின்றனர். சுற்றுலா சார்ந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டால், கோவிலுக்கு கூடுதல் பெருமை கிடைக்கும். இன்னும் அதிக பக்தர்கள் வருவர்,' என்றனர்.