/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/4 கோவிலில் கைவரிசை :பக்தர்கள் கடும் அதிர்ச்சி4 கோவிலில் கைவரிசை :பக்தர்கள் கடும் அதிர்ச்சி
4 கோவிலில் கைவரிசை :பக்தர்கள் கடும் அதிர்ச்சி
4 கோவிலில் கைவரிசை :பக்தர்கள் கடும் அதிர்ச்சி
4 கோவிலில் கைவரிசை :பக்தர்கள் கடும் அதிர்ச்சி
ADDED : ஜன 06, 2024 11:58 PM
திருப்பூர்:காங்கயம் - தாராபுரம் ரோடு தண்ணீர் பந்தல், பூவாநல்லுார் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் பூசாரி சுப்ரமணியம், 52 பூஜை செய்து விட்டு சென்றார். நேற்று காலை வந்த போது, கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மாங்கல்ய பொட்டைமர்ம நபர்கள் திருடி சென்றனர்.
n பூவாநல்லுார் காலனியில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலில், உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றனர். இரு திருட்டு குறித்து, காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
n ஊதியூர், கொத்தனுார் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூட்டை உடைத்த நபர்கள், கால் சவரன் தங்கமாங்கல்யம் இரண்டை திருடி சென்றனர்.
n வலசுபாளையத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, மாங்கல்ய பொட்டை திருடி சென்றுள்ளனர். இரு திருட்டு குறித்து ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரோந்து மந்தம்
காங்கயம் போலீஸ் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, காங்கயம், ஊதியூர் பகுதிகளில் ஒரே நாள் இரவில், நான்கு கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம பகுதிகளில் போலீசார் முறையாக ரோந்து மேற்கொள்ளாத காரணமாகவே, திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.