ADDED : ஜன 03, 2024 12:44 AM
திருப்பூர்:மக்களுடன் முதல்வர் திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 57 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன; 26,278 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த டிசம்பர் 18ம் தேதி துவங்கிய மக்களுடன் முதல்வர் திட்டம், வரும் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. திருமுருகன்பூண்டி நகராட்சியின் 3 முதல் 10 வார்டுகள், 22, 23 வார்டுகளுக்கான முகாம், மாணிக்கவாசகர் அரங்கில் நடந்தது.
பல்லடம் நகராட்சியின் 13 முதல் 18 வார்டுகளுக்கு, பி.எம்.ஆர்., சுப்புலட்சுமி திருமண மண்டபம், முத்துார் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும், கொடுமுடி ரோட்டில் உள்ள கனகதாரா மண்டபம், தொங்குட்டி பாளையம் வார்டுகளுக்கு ஸ்ரீ விவேகானந்தா டியூசன் சென்டரிலும் நேற்று முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் இதுவரை 57 முகாம்கள் நடத்தப்பட்டு, 26,278 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இன்றைய முகாம்
திருப்பூர் மாநகராட்சி 25, 26, 27வது வார்டுகளுக்கு, அம்மன் கலையரங்கம், 52, 55வது வார்டுகளுக்கு ராமசாமி முத்தம்மாள் மண்டபம், காங்கயம் நகராட்சி 1,2,5,6,7,8வது வார்டுகளுக்கு வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், கணியூர் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளுக்கு சதுரகிரி மகாலிங்கசாமி கோவில் மண்டபம், மொரட்டுப்பாளையம் ஊராட்சி அனைத்து வார்டுக்கு கோட்டையம்மன் கோவில் ஆகிய இடங்களிங், இன்று 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடைபெறுகிறது.