/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/2024 திருப்புமுனை; பின்னலாடை துறை நம்பிக்கை2024 திருப்புமுனை; பின்னலாடை துறை நம்பிக்கை
2024 திருப்புமுனை; பின்னலாடை துறை நம்பிக்கை
2024 திருப்புமுனை; பின்னலாடை துறை நம்பிக்கை
2024 திருப்புமுனை; பின்னலாடை துறை நம்பிக்கை
ADDED : ஜன 01, 2024 12:21 AM
திருப்பூர்:''2024 ஆங்கிலப் புத்தாண்டு, திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்துக்கு திருப்புமுனையாக அமையும்; நாற்பது சதவீத ஏற்றுமதியாளர்கள் செயற்கை நுாலிழை ஆடை தொழில்நுட்பத்துக்கு மாறியிருப்பர்'' என்று இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறினார்.
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்களிடம் புதிய நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால வர்த்தக மந்த நிலை மாறி, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:
கடந்த 2023ம் ஆண்டின் துவக்கம், ஏற்றுமதியாளருக்கு சோதனையான காலகட்டமாக இருந்தது. கடைசி மூன்று மாதங்களில், வர்த்தக வாய்ப்பு பழைய நிலைக்கு திரும்பியது. ஆங்கிலப்புத்தாண்டில் ஜன., மாதத்தில், வர்த்தகம் சிறப்பாக மாறும்.
எதிர்பார்த்திருந்த, பிரிட்டன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், இந்தாண்டில் நிறைவேறும். அதன் மூலம் ஏற்றுமதி வர்த்தகம், 30 சதவீதம் வரை வளர்ச்சி பெறும். ஆகமொத்தம், 2024ம் ஆண்டு, திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு பெரிய மாற்றத்தை வழங்குவதாகவும், திருப்புமுனையாகவும் அமையும்.
'பாரத்டெக்ஸ்' கண்காட்சி, பிப்., மாதம் நடக்கிறது; செயற்கை நுாலிழை ஆடை தொழில்நுட்பத்தை, கண்காட்சியில் முன்வைக்கிறோம்.
திருப்பூரில், 20 சதவீத ஏற்றுமதியாளர்,செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் கால்பதித்துவிட்டனர்;2024 நிறைவில், 40 சதவீத ஏற்றுமதியாளர் இக்களத்துக்கு மாறியிருப்பார்கள். ஆகமொத்தம், 2024ம் ஆண்டு, பிரகாசமான ஆண்டாக அமையும்.
இவ்வாறு, சக்திவேல் கூறினார்.