ADDED : ஜன 06, 2024 12:32 AM
பொங்கலுார்;ஆடி மற்றும் பங்குனி ஆகிய இரண்டு சீசனில் முழங்கை அதிக அளவு காய்கிறது. அப்போது கிலோ இரண்டு ரூபாய்க்கு கூட விலை போகாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். கடந்த ஐப்பசி மாதம் முதல் தொடர் மழை பெய்து வருவதால் செடியில் இருந்த பூக்கள் முற்றிலும் உதிர்ந்து விட்டது. இதனால், விளைச்சல் இல்லை.
சந்தைக்கு மிக மிகக் குறைந்த அளவே முருங்கை வரத்து இருப்பதால் அதன் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு காய் சர்வ சாதாரணமாக பத்து ரூபாய்க்கும், கிலோ, 200 ரூபாய்க்கும் விலை போகிறது. அபரி மிதமான விலை உயர்வால் பொதுமக்கள் முருங்கையை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.