/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
ADDED : மார் 12, 2025 12:39 AM

திருப்பூர்; திருப்பூரில் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபரை கைது செய்தனர்.
கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கையை திருப்பூர் மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வெளி மாநிலங்களில் இருந்து வர கூடிய ரயில்களில் கஞ்சா கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீசார் கண்காணித்து கைது செய்துவருகின்றனர்.
நேற்று திருப்பூருக்கு வந்த சாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வந்த பயணிகளை கண்காணித்தனர். அதில், சந்தேகப்படும் விதமாக ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ் பிராஷ், 27 என்பது தெரிந்தது.
சோதனையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட, 2 கிலோ கஞ்சா பிடிபட்டது. அவரைகைது செய்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.