/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'கனவு இல்ல' திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை 'கனவு இல்ல' திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை
'கனவு இல்ல' திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை
'கனவு இல்ல' திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை
'கனவு இல்ல' திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை
ADDED : ஜூலை 19, 2024 08:49 PM
திருப்பூர்:கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்ட பணி ஆணை வழங்கும் விழா, காங்கயம் மீனாட்சி மஹாலில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்தராஜ் தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலைவகித்தார்.
காங்கயம், வெள்ளகோவில் மற்றும் குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 398 பயனாளிகளுக்கு, மொத்தம் ரூ. 10.22 கோடி மதிப்பீட்டில் கனவு இல்ல திட்ட வீடுகள் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்ட பணி ஆணை வழங்கப்பட்டது.
காங்கயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 129 பயனாளிகளுக்கு, தலா, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம் 4.51 கோடி; வெள்ளகோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட 117 பயனாளிகளுக்கு தலா 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 4.09 கோடி, குண்டடம் ஒன்றியத்தில் 10 பேருக்கு, மொத்தம் 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கனவு இல்ல திட்ட பணி ஆணை வழங்கப்பட்டது.
தொகுப்பு வீடுகள் பராமரிப்புக்காக, 142 பயனாளிகளுக்கு 1.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டது. இதனை, பயனாளிகளுக்க அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். காங்கயம் தாசில்தார் மயில்சாமி, பி.டி.ஓ.,க்கள் விமலாவதி, அனுராதா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.