நொய்யல் ஆற்றில் பெண் சடலம் மீட்பு
நொய்யல் ஆற்றில் பெண் சடலம் மீட்பு
நொய்யல் ஆற்றில் பெண் சடலம் மீட்பு
ADDED : ஜூலை 18, 2024 10:57 PM
திருப்பூர்;திருப்பூர் நொய்யல் ஆற்றில் பெண் சடலம் மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் சுகுமார் நகரையொட்டி செல்லக்கூடிய நொய்யல் ஆற்றில் பெண் சடலம் மதிப்பதாக அப்பகுதி மக்கள் திருப்பூர் தெற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி மிதந்த, மூதாட்டியின் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இறந்தவர், திருப்பூர், காங்கயம் ரோட்டை சேர்ந்த மாராத்தாள், 80 என்பது தெரிந்தது. இது குறித்து, திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.