/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கலைப் போட்டியில் வெற்றி இளைஞர்களுக்குப் பரிசு கலைப் போட்டியில் வெற்றி இளைஞர்களுக்குப் பரிசு
கலைப் போட்டியில் வெற்றி இளைஞர்களுக்குப் பரிசு
கலைப் போட்டியில் வெற்றி இளைஞர்களுக்குப் பரிசு
கலைப் போட்டியில் வெற்றி இளைஞர்களுக்குப் பரிசு
ADDED : ஜூலை 07, 2024 12:12 AM
திருப்பூர்:கோவை மண்டல கலைப் பண்பாட்டு மையத்திற்கு உட்பட்ட, திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன.
குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் என, 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் நடந்த போட்டியில், 50க்கும் மேற்பட்ட இளைஞர், இளம் பெண்கள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசு, 6,000 ரூபாய்; இரண்டாம் பரிசு, 4,500, 3ம் பரிசு, 3,000 ரூபாய்க்கான பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றி தழை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், உதவி இயக்குனர் நீலமேகன் (கலை மற்றும் பண்பாட்டு துறை) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.