/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கொப்பரை கொள்முதல் நீட்டிக்கப்படுமா? கொப்பரை கொள்முதல் நீட்டிக்கப்படுமா?
கொப்பரை கொள்முதல் நீட்டிக்கப்படுமா?
கொப்பரை கொள்முதல் நீட்டிக்கப்படுமா?
கொப்பரை கொள்முதல் நீட்டிக்கப்படுமா?
ADDED : ஜூன் 29, 2024 01:38 AM
திருப்பூர்;கொப்பரை தேங்காய் கொள்முதலை, செப்., மாதம் வரை நீட்டிக்க வேண்டுமென, விவசாயிகள் முறையிட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில், தேங்காய் கொப்பரை கொள்முதல் நிறைவடைந்துள்ளது. மாவட்டத்தில், 22 ஆயிரம் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில், 7,500 டன் மட்டுமே வந்துள்ளது. இதனால், கொள்முதல் மையங்கள் மூடப்பட்டுள்ளன.
கொப்பரை அதிகம் தேக்கமடைந்துள்ளதால், செப்., வரை கொள்முதலை நீட்டிக்க வேண்டுமென குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.
மாவட்ட விற்பனை குழு அதிகாரிகள் கூறுகையில், ''மாவட்டத்தில், எதிர்பார்ப்புடன் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது; எதிர்பார்த்த அளவு கொப்பரை வரவில்லை. இருப்பினும், விவசாயிகள் கோரிக்கை வைக்கும்பட்சத்தில், உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி, மீண்டும் சில மாதங்கள் கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதி பெறப்படும். இதுதொடர்பாக முன்னறிவிப்பு செய்யப்படும்,' என்றனர்.