/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜோலார்பேட்டை ரயில் கோவை வரை ஓடுமா? ஜோலார்பேட்டை ரயில் கோவை வரை ஓடுமா?
ஜோலார்பேட்டை ரயில் கோவை வரை ஓடுமா?
ஜோலார்பேட்டை ரயில் கோவை வரை ஓடுமா?
ஜோலார்பேட்டை ரயில் கோவை வரை ஓடுமா?
ADDED : ஜூன் 01, 2024 09:29 PM
திருப்பூர்:ஜோலார்பேட்டை - ஈரோடு ரயிலை கோவை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
தினமும் காலை, 6:00 மணிக்கு ஈரோடில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. மதியம் 11:50க்கு ஜோலார்பேட்டை சென்றடைகிறது. மறுமார்க்கமாக, மதியம், 3:10 மணிக்கு ஜோலார்பேட்டையில் புறப்படும் ரயில் இரவு, 8:00 மணிக்கு ஈரோடு வந்தடைகிறது.
ரயிலை கோவை வரை நீட்டித்தால், பயணியருக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். காரணம், இந்த நேரத்தில் உள்ள பிற ரயில்கள் யாவும் முன்பதிவு பெட்டி உள்ள ரயில்கள். பொதுப்பெட்டிகள் இல்லாததால் சாதாரணப் பயணியர் பயணிக்க முடியாது.
எனவே ஜோலார்பேட்டை - ஈரோடு ரயிலை கோவை வரை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.