/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உலக கோப்பை வெல்லுமா இந்தியா? 'நம்ம ஊர்' ரசிகர்கள் கணிப்பு உலக கோப்பை வெல்லுமா இந்தியா? 'நம்ம ஊர்' ரசிகர்கள் கணிப்பு
உலக கோப்பை வெல்லுமா இந்தியா? 'நம்ம ஊர்' ரசிகர்கள் கணிப்பு
உலக கோப்பை வெல்லுமா இந்தியா? 'நம்ம ஊர்' ரசிகர்கள் கணிப்பு
உலக கோப்பை வெல்லுமா இந்தியா? 'நம்ம ஊர்' ரசிகர்கள் கணிப்பு

வலது - இடது கை பேட்டிங் ஜோடி களமிறங்க வேண்டும்
கார்த்திக், வீரபாண்டி: டி--20 உலகக் கோப்பை போட்டியை பொறுத்தவரை, போட்டி நடத்தும் அணியும், இதற்கு முந்தைய ஆண்டுகளில் கோப்பை வாங்கிய அணியும், அடுத்த ஆண்டிலே வெற்றி பெறுவது அரிதிலும் அரிது. இத்தொடரில், அந்த வரலாற்றை மாற்ற, ஆஸி., முயற்சிக்கும்.
இந்தியா - ஆஸி., அணிகள் பைனலுக்கு தகுதியானவை
செந்தில்குமார், அவிநாசி: இந்தியா - ஆஸி., அணிகள் இறுதிப்போட்டிக்கு வர நிறைய வாய்ப்புள்ளது. அப்படி வந்தால், டிக்கெட் அதிகளவில் விற்கும். இரண்டுமே தகுதியான அணி தான். எனவே, நிச்சயம் வர வாய்ப்புள்ளது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 'லீக்' போட்டிகளில் திறமையை காட்டியுள்ளன. சூப்பர்- 8ல் தடுமாறுகின்றன. அரையிறுதிக்கு போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
'மேட்ச் பினிசிங்'கில் நம்மவர்கள் சிறப்பு
முகமது அப்பாஸ், தேவராயம்பாளையம்: இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸி., இங்கிலாந்து அரையிறுதிக்கு வரும். யாருடன் இறுதிப் போட்டி நடந்தாலும், இந்திய அணி கோப்பை வெல்வது நிச்சயம். 'லீக்' போட்டிகள் நடந்த அமெரிக்க மைதானங்களில் ரன் சேர்க்க முடியாமல் அணிகள் தடுமாறின. ஆனால், அரையிறுதி, இறுதிப்போட்டி அப்படியிருக்காது. ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த பேட்டிங், பவுலிங் உள்ளதால், இறுதி போட்டிக்கு நம் அணி செல்வதும், கோப்பையைத் தட்டி துாக்குவதும் உறுதி.
'பேட்டிங்' இந்தியா சிறப்பு 'பவுலிங்' ஆஸி., அசத்தல்
தினேஷ் குமார், காலேஜ் ரோடு, திருப்பூர்: இருக்கும் அணிகளில் பலம் வாய்ந்த அணியாக இந்தியா உள்ளது. இந்திய அணியில் தான் எட்டு பேட்ஸ்மேன், நான்கு ஸ்பின்னர். எவ்வளவு விக்கெட் போனாலும், அடுத்தடுத்து பேட்ஸ்மேன்களை (ஆல்ரவுண்டர் சேர்த்து) இறக்கி விடும் வாய்ப்பு நம் அணியிடம் மட்டுமே உள்ளது. மற்ற அணிகளில் ஆறு பேட்ஸ்மேன் மட்டுமே உள்ளனர். பந்து வீச்சால் ஆஸி., அணி அடுத்தடுத்த போட்டிகளுக்கு முன்னேறி விடும்.
இந்திய அணியின் துவக்க ஜோடி மாறினால் ரன் குவிக்க வாய்ப்பு
மனோஜ்குமார், ெஷரீப் காலனி: விளையாடிய எந்த போட்டியிலும் துவக்க ஜோடி, முதல் பவர்பிளேவில் இந்திய அணி சோபிக்கவில்லை. இனி வரும் போட்டிகளிலாவது துவக்க ஜோடியை மாற்ற வேண்டும். ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா ஓபனிங் தந்தால், முதல் பவர்பிளேவில், 60 ரன் குவிக்க முடியும்.