/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நடைமுறைக்கு வர தாமதம் ஏன்? அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நடைமுறைக்கு வர தாமதம் ஏன்?
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நடைமுறைக்கு வர தாமதம் ஏன்?
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நடைமுறைக்கு வர தாமதம் ஏன்?
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நடைமுறைக்கு வர தாமதம் ஏன்?
ADDED : ஜூன் 07, 2024 07:48 PM
திருப்பூர்:கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,756 கோடி ரூபாய் மதிப்பில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து முடிந்துள்ளது. ஆறு நீரேற்று நிலையங்கள் வாயிலாக, 1,045 குளம் குட்டைகளில் நீர் நிரப்பும் வகையிலான இத்திட்டப்பணி, வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு, நடைமுறைக்கு தயார் நிலையில் உள்ளது.திட்டம் சார்ந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், கடந்தாண்டே திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், தாமதமாகிக் கொண்டே இருந்தது.
கடந்த மாதம், நீலகிரி. மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிகளவு மழை பெய்தது; பவானி அணையில் வெள்ளம் வந்தது. இருப்பினும், அத்திக்கடவு திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. 'மழை பெய்தும் பவானி ஆற்றில் போதிய நீர் வரத்து இல்லை; 400 கன அடி நீர் பவானி சாகர் அணையில் இருந்து வெளியேறும் பட்சத்தில், திட்டம் சாத்தியமாகும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.