ADDED : ஜூன் 29, 2024 02:37 AM

அவிநாசி - நம்பியூர் சாலை விரிவாக்க பணிகள் நடந்தபோது நெடுஞ்சாலை துறை மூலம் வைக்கப்பட்ட விபத்து தடுப்பு விழிப்புணர்வு பதாகை கம்பங்கள் அகற்றப்பட்டு ரோட்டோரம் வைக்கப்பட்டன. சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் கடந்த பின், விபத்து தடுக்கும் வகையில், பதாகையை மீண்டும் வைக்காமல் நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனமாக உள்ளனர்.
மக்கள் சேவகன் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், ''மக்களின் வரிப்பணத்தை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வீணடித்து வருகின்றனர். உடனடியாக எச்சரிக்கை பதாகையை மீண்டும் நட வேண்டும்'' என்றனர்.
----
கழற்றிவைக்கப்பட்ட எச்சரிக்கை பலகை