/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தாராபுரம் ரோட்டில் செல்ல வாகனங்கள் 'தரிகிடதோம்' தாராபுரம் ரோட்டில் செல்ல வாகனங்கள் 'தரிகிடதோம்'
தாராபுரம் ரோட்டில் செல்ல வாகனங்கள் 'தரிகிடதோம்'
தாராபுரம் ரோட்டில் செல்ல வாகனங்கள் 'தரிகிடதோம்'
தாராபுரம் ரோட்டில் செல்ல வாகனங்கள் 'தரிகிடதோம்'
ADDED : ஜூன் 18, 2024 12:21 AM

திருப்பூர்;தாராபுரம் ரோட்டில் குழாய் பதிக்க குழி தோண்டியதை சீரமைக்காததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், 'ஸ்மார்ட் சிட்டி' மற்றும் 'அம்ரூத்' திட்டங்களில், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில் இருந்து, உஷா தியேட்டர் சந்திப்பு வரை, தாராபுரம் ரோட்டில் குழி தோண்டப்பட்டது.
ரோட்டின் வடபுறம் குழி தோண்டி, குழாய் பதித்து பல நாட்களாகியும், 'பேட்ஜ் ஒர்க்' நடக்கவில்லை. அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சென்றுவருவதால், குழி தோண்டிய இடம் பள்ளமாக மாறியுள்ளது. கனரக வாகனங்களின் பின்னால் செல்லும் டூ வீலர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.
தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ரோடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, குழாய் பதித்ததால் ஏற்பட்ட ரோடு பாதிப்பை சீரமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலை ரோடான, தாராபுரம் ரோடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.