/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சென்சுரி மெட்ரிக் பள்ளியில் 'வன மகோத்சவம் வாரம்' சென்சுரி மெட்ரிக் பள்ளியில் 'வன மகோத்சவம் வாரம்'
சென்சுரி மெட்ரிக் பள்ளியில் 'வன மகோத்சவம் வாரம்'
சென்சுரி மெட்ரிக் பள்ளியில் 'வன மகோத்சவம் வாரம்'
சென்சுரி மெட்ரிக் பள்ளியில் 'வன மகோத்சவம் வாரம்'
ADDED : ஜூலை 06, 2024 11:58 PM

திருப்பூர்;சென்சுரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், வன மகோத்சவ வாரம் கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் ஜூலை முதல் வாரம்மாணவர்களால் மரக்கன்று நடப்பட்டது.
நாட்டின் முதல் தேசிய மரம் நடும் வாரம் ஜூலை, 20 முதல், 27 வரை, 1947ம் ஆண்டில், பஞ்சாபி அரசு ஊழியரும், தாவரவியலாளரும், வரலாற்று ஆசிரியருமான மொகிந்தர் சிங் ரந்தவா என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது. 1950 முதல் இந்தப் பாரம்பரியம் தொடரப்பட்டுத் தேசிய நடவடிக்கையாக மாற்றப்பட்டது. இதுவே, வன மகோத்சவம் எனும் பெயரில் ஜூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.
திருப்பூர், சென்சுரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நடந்த வன மகோத்சவ வாரம் நிகழ்ச்சியில், ஒவ்வொரு குடிமகனும் மரக்கன்று நட வேண்டும் என்பதை கடமையாக கொள்ள வேண்டும். ' மரங்களை வெட்டாதே, காட்டை அழிக்காதே, காடின்றி நாடில்லை, நாடின்றி நாமில்லை' என்பன உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வை எடுத்துரைத்தனர்.