/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் திட்டம்; விரிவாக்க மையங்களில் சிறப்பு முகாம் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் திட்டம்; விரிவாக்க மையங்களில் சிறப்பு முகாம்
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் திட்டம்; விரிவாக்க மையங்களில் சிறப்பு முகாம்
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் திட்டம்; விரிவாக்க மையங்களில் சிறப்பு முகாம்
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் திட்டம்; விரிவாக்க மையங்களில் சிறப்பு முகாம்
ADDED : மார் 11, 2025 09:36 PM
உடுமலை; விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்குவதற்காக, செயலியில் பதிவேற்றம் செய்ய, மடத்துக்குளம் வேளாண் விரிவாக்க மையம் மற்றும் இ-சேவை மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது, என வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.
மடத்துக்குளம் வட்டாரத்தில், அனைத்து விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்கான பணிகள், வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்து வருகிறது. தற்போது, மடத்துக்குளம் வட்டாரத்தில், 7,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.
அவர்களுக்கு அடையாள எண் வழங்குவதற்கான முகாம்கள், அந்தந்த வருவாய் கிராமங்களில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில், கடந்த பிப்., துவங்கி, மூன்று வாரங்கள் நடந்தது. இதில், 3,500 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் வாயிலாக செயல்படுத்தப்படும், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்களுக்கு, 'பார்மர் ரெஜிஸ்ட்ரி' செயலி வாயிலாக வழங்கப்படும் அடையாள எண் அவசியமானது, என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு, பி.எம்., கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு இரு முறை, ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு, வரும் ஏப்.,1 முதல், இந்த விவசாய அடையாள எண் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
எனவே, விவசாயிகளுக்கு அரசு மானியங்கள் மற்றும் பி.எம்., கிஷான் நிதி தடையில்லாமல், வழங்க இதுவரை பதிவு செய்த விவசாயிகள், இந்த செயலியில் தங்களது நில உடைமைகளை பதிவதற்கு வசதியாக, சிறப்பு முகாம், மடத்துக்குளம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், வரும், 18ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை நடக்கிறது.
எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, விரைந்து அடையாள எண் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் வரும் போது தங்களது ஆதார் எண், சிட்டா, வங்கிக்கணக்கு விபரம், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை வேளாண் விரிவாக்க மையத்தில் தந்து, 'பார்மர் ரெஜிஸ்ட்ரி' (Farmer Registry)செயலியில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இச்சேவை அந்தந்த கிராமங்களில் உள்ள இ--சேவை மையங்களில் வழங்கப்படுவதால், அங்கும் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.