/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இரு வேறு விபத்துகள் ;2 பேர் பரிதாப பலிஇரு வேறு விபத்துகள் ;2 பேர் பரிதாப பலி
இரு வேறு விபத்துகள் ;2 பேர் பரிதாப பலி
இரு வேறு விபத்துகள் ;2 பேர் பரிதாப பலி
இரு வேறு விபத்துகள் ;2 பேர் பரிதாப பலி
ADDED : ஜூன் 30, 2024 02:38 AM
திருப்பூர்;சேலத்தை சேர்ந்தவர் நாகபிரசாத், 34; பங்குச்சந்தை தொடர்பாக 'ஆன்லைன்' வகுப்புகள் எடுத்து வந்தார். இவரது மனைவி கீதா, திருச்சி ஆவினில் கால்நடை டாக்டராக உள்ளார். நாகபிரசாத், நேற்று கோவையில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மையதடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. அதில், நாகபிரசாத் பரிதாபமாக இறந்தார். மூலனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு விபத்து
திருப்பூர், ராக்கியாபாளையம் பிரிவு, ஜெய் நகரை சேர்ந்தவர் உமாசங்கர், 43. செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நல்லுாரிலிருந்து டூவீலரில் காசிபாளையம் ரோட்டின் வழியாக டூவீலரில் சென்றார். அவ்வழியாக வந்த சரக்கு வேன், டூவீலர் மீது மோதியது. படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.