மாநகராட்சி அலுவலர்களுக்கு பயிற்சி
மாநகராட்சி அலுவலர்களுக்கு பயிற்சி
மாநகராட்சி அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 01, 2024 11:13 PM

திருப்பூர் லோக்சபா தொகுதியில், அடங்கியுள்ள திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக, மாநகராட்சி கமிஷனர் உள்ளார்.அவ்வகையில் லோக்சபா தொகுதியில் திருப்பூர் தெற்கு தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை பணியில் மாநகராட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றவுள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கையின் போது, அலுவலர்கள், ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, பணியாற்றும் முறை ஆகியன குறித்து பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்தார்.