ADDED : ஜூலை 08, 2024 12:04 AM

பல்லடம்:திருப்பூர் வடக்கு மாவட்ட த.மா.கா., சார்பில் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். நகர தலைவர் முத்துக்குமாரசாமி வரவேற்றார்.
வட்டாரத் தலைவர்கள் சின்னசாமி, ஜெகதீசன், ராமசாமி, சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பல்லடத்தில் புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, ஜூலை 14 அன்று திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் வடக்கு மாவட்டம் சார்பாக, 500க்கும் மேற்பட்டவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.