Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உலகத்தர சிகிச்சை வழங்கும் திருப்பூர் கிட்னி சென்டர் :சிறுநீரகப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

உலகத்தர சிகிச்சை வழங்கும் திருப்பூர் கிட்னி சென்டர் :சிறுநீரகப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

உலகத்தர சிகிச்சை வழங்கும் திருப்பூர் கிட்னி சென்டர் :சிறுநீரகப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

உலகத்தர சிகிச்சை வழங்கும் திருப்பூர் கிட்னி சென்டர் :சிறுநீரகப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

ADDED : ஜூன் 30, 2024 11:16 PM


Google News
'கடந்த, 2007 ல், திருப்பூர் குமார் நகர் பி.என்., ரோடு சந்திப்பில் உள்ள, 60 அடி ரோட்டில், 'திருப்பூர் கிட்னி சென்டர்' துவங்கப்பட்டது.

மருத்துவ சேவை குறித்து, அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:

பரபரப்பான வாழ்க்கை சூழலில், ஓய்வில்லாமல் உழைப்பதால், சிறுநீரகம் மூலம் கழிவுகள் வெளியேறுவதில் பிரச்னை ஏற்படுகிறது. பொதுவாக, 20 முதல், 40 வயது பிரிவினருக்கு சிறுநீரக கல் அடைப்பு பிரச்னை அதிகளவில் ஏற்படுகிறது. ஆறு மாதம் துவங்கி, 80 வயது முதியவருக்கும் கூட இப்பிரச்னை வரலாம்; பரம்பரை வியாதியாகவும் தொடரலாம்.அடி வயிற்றில் வலி, தொடர் வாந்தி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். பொதுவாக வயிற்று வலி ஏற்பட்டால் நாட்டு வைத்தியத்தை மக்கள் நாடுகின்றனர். அதில், 70 முதல், 80 சதவீதம் பேர் குணமாகாமல், எங்களிடம் வருகின்றனர். ஸ்கேன் பார்த்து விட்டு வைத்தியம் பார்ப்பதே நல்லது; அப்போது தான், பிரச்னையின் தன்மையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

சிறுநீர் கல்லடைப்பை பொறுத்தவரை, வலி குணமாகிவிட்டால், அப்படியே விட்டுவிடக் கூடாது; தொடர் சிகிச்சை அவசியம். குழந்தைகளுக்கு, சிறுநீரக பாதையில் அடைப்பு ஏற்படவே கூடாது; ஏனெனில், சிகிச்சை வழங்குவது கடினம். குழந்தைகளுக்கு சிறுநீரக பிரச்னை தொடர்பான அறிகுறி தென்பட்டால், 'எம்.சி.ஓ.,' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.சிலருக்கு நீர் சத்து குறைபாடு காரணமாகவும், சிறுநீர் வெளியேறும் போது, எரிச்சல் ஏற்படலாம். சராசரியாக, 1.5 முதல், 2 லிட்., சிறுநீர் வெளியேற, குறைந்தது, 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். எங்கள் மருத்துவமனையில், சிறுநீரக பிரச்னைக்கு உலகத்தர சிகிச்சை வழங்கி வருகிறோம்; விரைவில், டயாலிசிஸ் பிரிவும் துவங்கவுள்ளோம்.

முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம், ஸ்டார் ெஹல்த் உள்ளிட்ட காப்பீடு திட்ட சலுகைகளும் உள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்துள்ளோம். 'என்டோஸ்கோபி' சிகிச்சை வழங்க பிரத்யேக ஏற்பாடுகளும் உள்ளன.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us