/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இப்படித்தான் போகுது பயணம்... திட்டமிடாத அதிகாரிகள்... திட்டித்தீர்க்கும் ஊழியர்கள்! இப்படித்தான் போகுது பயணம்... திட்டமிடாத அதிகாரிகள்... திட்டித்தீர்க்கும் ஊழியர்கள்!
இப்படித்தான் போகுது பயணம்... திட்டமிடாத அதிகாரிகள்... திட்டித்தீர்க்கும் ஊழியர்கள்!
இப்படித்தான் போகுது பயணம்... திட்டமிடாத அதிகாரிகள்... திட்டித்தீர்க்கும் ஊழியர்கள்!
இப்படித்தான் போகுது பயணம்... திட்டமிடாத அதிகாரிகள்... திட்டித்தீர்க்கும் ஊழியர்கள்!
UPDATED : ஜூலை 21, 2024 02:28 AM
ADDED : ஜூலை 21, 2024 12:25 AM

இம்மாதம், 18ம் தேதி இரவு, 9:00 மணி.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம் வழியாக திருவண்ணமாலைக்கு ஒரு பஸ் புறப்பட தயாராக இருந்தது. பஸ்சில் இருக்கை நிரம்பி பயணிகள் காத்திருந்தனர்.
அப்போது, திருவண்ணாமலைக்கு செல்லும் இன்னொரு பஸ் 'ரேக்'கில் இடமில்லாததால், எஸ்.இ.டி.சி., பஸ்கள் நிற்குமிடத்தில் நின்றது. அதிலும், அனைத்து இருக்கையும் நிரம்பி, பஸ்சுக்குள் பயணிகள் நின்றிருந்தனர்.
இதனை பார்த்து அங்கு வந்த போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர், 'நீங்கள் இங்கு வந்து திருவண்ணாமலைக்கு ஆள் ஏற்றக்கூடாது. இது, சென்னை செல்லும் பஸ் (வழி: திருவண்ணாமலை) நிற்குமிடம். உடனடியாக பயணிகளை இறக்கி விடுங்கள்,' என்றார்.
சில பயணிகள் இறங்கி, சென்னைக்கு பஸ்சுக்கு செல்ல, மறு நிமிடம் பயணிகளுடன், அவசர கதியில் பஸ் புறப்பட்டது. கோபமடைந்த சென்னை வழி திருவண்ணாமலை பஸ் டிரைவர், திருவண்ணாமலை ஏ.சி., பஸ் நிற்குமிடத்துக்கு பஸ்சை ஓட்டிச் சென்று, நிறுத்தினர். இதனை பார்த்த ஏ.சி., பஸ்சில் அமர்ந்திருந்த தி.மலை செல்லும் பயணிகள், அதிலிருந்து இறங்கி, (திருவண்ணாமலை வழி) சாதாரண பஸ்சுக்கு வந்தனர்.
பல பயணிகள் ஏ.சி., பஸ்சில் இருந்து இறங்கி, பஸ் மாறிய நிலையில், ஏ.சி., பஸ் டிரைவர், நடத்துனர் பணியில் இருந்த போக்குவரத்து அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் சென்னை - திருவண்ணாமலை வழி பஸ்சும் புறப்பட்டு சென்றது. ஏ.சி., பஸ்சுக்கு கலெக் ஷன் இல்லை. நீண்ட நேர காத்திருப்புக்கு பின், குறைந்தளவு பயணிகளுடன் பஸ் புறப்பட்டது.
'பிளான் பண்ணி பண்ணனும்!'
இது திருவண்ணாமலை பஸ்சுக்கு மட்டுமல்ல. நிர்வாக திறமை இல்லாத அதிகாரிகளால் வார விடுமுறை நாட்களில் இவ்வாறு பல பஸ்களில் நடக்கிறது. சிறப்பு பஸ் இயங்கியபோதும், பஸ்கள் இருந்த போதும், நேர வரையறை பின்பற்றாததால், சிரமப்படுவது என்னவோ பயணிகள் தான்.
எந்த பஸ் முதலில் இயங்கும் என்ற விவரத்தை கோவை, மதுரை, சென்னையை போன்று மைக்கில், பஸ்சின் பதிவு எண்ணுடன் அறிவித்தால், பயணிகள் சிரமம் குறையும். அதிகாரிகளும் எல்லாமே அரசு போக்குவரத்து கழக வருமானம் தான் என பயணிகளை இங்கும், அங்கும் அலைக்கழிப்பதை இனியாவது நிறுத்த வேண்டும்.