ADDED : ஜூன் 07, 2024 12:33 AM
தெக்கலுாரில் இறைச்சிக்கடை வைத்திருப்பவர் ஆறுமுகம், 48. இரவு வெளியூர் சென்று விட்டு, தனது கடை முன் டூவீலரை நிறுத்தி சென்றார்.
நேற்று காலை, பார்த்த போது டூவீலரை காணவில்லை. புகாரின் பேரில், அவிநாசி போலீசார், அருகிலிருந்த 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரு இளைஞர்கள், முககவசம் அணிந்து, டூவீலர் 'சைடு லாக்' உடைத்து திருடி சென்றது தெரிந்தது. இருவரையும் போலீசார் தேடுகின்றனர்.