/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருவள்ளுவர் சிலை அமைப்புபீடம் அமைக்கும் பணி தீவிரம் திருவள்ளுவர் சிலை அமைப்புபீடம் அமைக்கும் பணி தீவிரம்
திருவள்ளுவர் சிலை அமைப்புபீடம் அமைக்கும் பணி தீவிரம்
திருவள்ளுவர் சிலை அமைப்புபீடம் அமைக்கும் பணி தீவிரம்
திருவள்ளுவர் சிலை அமைப்புபீடம் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 16, 2024 01:45 AM

திருப்பூர்:திருப்பூர், ஊத்துக்குளி ரோடு போக்குவரத்து ரவுண்டானாவில், திருவள்ளுவர் சிலை அமைக்கப்பதற்கான பணி மும்முரமாக நடக்கிறது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில், எஸ்.ஆர்.சி., மில்ஸ் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஊத்துக்குளி ரோட்டிலிருந்து ரயில்வே பாதையைக் கடந்து செல்லும் வகையில் இந்த பாலம் கட்டி முடித்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள இந்த பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள இடம் உரிய வகையில் பயன்படும் வகையில் விளையாட்டு ஆர்வலர்கள் பயன்படுத்தும் வகையில் கூடைப்பந்து, கிரிக்கெட் பயிற்சி மைதானம் ஆகியன அமைக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர பாலம் வழியாகச் செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும் விதமாக போக்குவரத்து ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து ரவுண்டானா பகுதியை, 'ஆலயா அகாடமி' கல்வி நிறுவனம் பராமரிக்க முன் வந்துள்ளது. இத்துடன் 'வேர்கள்' தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த இடத்தில் பூங்காவும், திருவள்ளுவர் சிலையும் அமைக்க முடிவு செய்துள்ளன.
இவ்விடத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா மற்றும் சிலை அமையவுள்ளது. இதற்காக, சிலை அமையவுள்ள இடத்தில் பீடம் கட்டும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் இங்கு திருவள்ளுவர் சிலை அமைத்து திறக்கப்படும்.