/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மெல்ல உயர்கிறது வரத்து; சரிகிறது தக்காளி விலை மெல்ல உயர்கிறது வரத்து; சரிகிறது தக்காளி விலை
மெல்ல உயர்கிறது வரத்து; சரிகிறது தக்காளி விலை
மெல்ல உயர்கிறது வரத்து; சரிகிறது தக்காளி விலை
மெல்ல உயர்கிறது வரத்து; சரிகிறது தக்காளி விலை
ADDED : ஜூன் 27, 2024 11:26 PM
திருப்பூர் : திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உழவர் சந்தை செயல்படுகிறது. பெருமாநல்லுார், குன்னத்துார், செங்கப்பள்ளி, அவிநாசி, சேவூர், தொரவலுார், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதியில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
வழக்கமாக, மூன்று டன் தக்காளி விற்பனைக்கு வரும். இம்மாத துவக்கத்தில் தக்காளி வரத்து, ஒன்று முதல் ஒன்றரை டன்னாக குறைந்தது. வரத்து குறைவால், கிலோ, 65ல் இருந்து 75 ரூபாய் வரை உயர்ந்தது.
வார விடுமுறை நாட்களில் சந்தைக்கு வந்து ஐந்து முதல் பத்து கிலோ தக்காளியை வாங்கும் வாடிக்கையாளர் கூட, இரண்டு கிலோ மட்டுமே வாங்கிச் சென்றனர். தக்காளி விலை எப்போது குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
'நல்ல விலை' யை எதிர்பார்த்து விவசாயிகள் தொடர்ந்து தக்காளி கொண்டு வர துவங்கியதால், நேற்று தக்காளி வரத்து, 1.80 டன்னாக உயர்ந்தது. இதனால், ஒரு கிலோ, 70 ரூபாய்க்கு விற்ற முதல் தர தக்காளி சற்று விலை குறைந்து, 55 ரூபாயாகியுள்ளது.
உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில்,'கடந்த பத்து நாட்களோடு ஒப்பிடுகையில், சந்தைக்கான தக்காளி வரத்து சற்று உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் வரத்து இன்னமும் அதிகமானால், ஒரு கிலோ தக்காளி விலை, 50 ரூபாய்க்கு கீழ் வந்துவிடும்,' என்றனர்.