/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நண்பர்கள் தாக்கியதால் விஷம் குடித்த வாலிபர் நண்பர்கள் தாக்கியதால் விஷம் குடித்த வாலிபர்
நண்பர்கள் தாக்கியதால் விஷம் குடித்த வாலிபர்
நண்பர்கள் தாக்கியதால் விஷம் குடித்த வாலிபர்
நண்பர்கள் தாக்கியதால் விஷம் குடித்த வாலிபர்
ADDED : ஜூலை 19, 2024 01:05 AM
ருப்பூர், ஜூலை 19-
திருப்பூரில், நண்பர்கள் தாக்கியதால் வாலிபர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஊத்துக்குளியை சேர்ந்தவர் உமேஷ், 34. இவர் தனது நண்பரான செங்கப்பள்ளியை சேர்ந்த வினோத்குமார், 34 என்பவரிடம் தனது காரை அடகு வைத்து பணம் வாங்கி வர கூறினார். வினோத்குமாரும் திருப்பூரில் ஒரு இடத்தில், 60 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து பணம் வாங்கினார். ஆனால், பணத்தை உமேஷிடம் கொடுக்காமல் செலவழித்தார்.
இதுகுறித்து அறிந்த உமேஷ், தனது நண்பர் களான அசோக்குமார், 38, பெருமாள், 48 ஆகியோருடன் சேர்ந்து, வினோத்குமாரை நேரில் அழைத்து தாக்கினார். மனமுடைந்த வினோத்குமார் செங்கப்பள்ளிக்கு திரும்பியதும், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் உமேஷ், அசோக்குமார், பெருமாள் ஆகியோரை கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.