/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்கேட்டிங் போட்டியில் 'ஸ்பிரிங் மவுன்ட்' அசத்தல் ஸ்கேட்டிங் போட்டியில் 'ஸ்பிரிங் மவுன்ட்' அசத்தல்
ஸ்கேட்டிங் போட்டியில் 'ஸ்பிரிங் மவுன்ட்' அசத்தல்
ஸ்கேட்டிங் போட்டியில் 'ஸ்பிரிங் மவுன்ட்' அசத்தல்
ஸ்கேட்டிங் போட்டியில் 'ஸ்பிரிங் மவுன்ட்' அசத்தல்
ADDED : ஜூலை 28, 2024 12:30 AM

திருப்பூர்:திருப்பூர் சஹோதயா பள்ளிகளுக்கு இடையேயான ஸ்கேட்டிங் போட்டியில், ஸ்பிரிங் மவுன்ட் பள்ளி அசத்தியது.
திருப்பூர் சஹோதயா ஸ்கேட்டிங் போட்டி ஸ்பிரிங் மவுன்ட் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது. திருப்பூரில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ., மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஸ்பிரிங் மவுண்ட் பள்ளியை சேர்ந்த மாணவி தீபஜோதி, 16 வயது பிரிவில், இரண்டு தங்கம், பிளஸ் 1 மாணவன் ரித்விக், 19 வயது பிரிவில், 2 வெள்ளி பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஜெயந்தி பள்ளி தாளாளர் கிருஷ்ணன், ஆலோசகர் சிலம்பு செல்வன், பள்ளி முதல்வர் மலர்விழி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
உடற்கல்வி ஆசிரியர் களான வினோத், கவுரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.